மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தாமிரா 2010ஆம் ஆண்டு, ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கினார்.
தனது முதல் படத்திலேயே கே. பாலச்சந்தர்- பாரதிராஜா ஆகியோரை வைத்து படம் இயக்கி கவனம் பெற்றார். இதனையடுத்து எட்டு ஆண்டுகள் கழித்து சமுத்திரக்கனியை வைத்து ’ஆண் தேவதை’ படத்தை இயக்கினார்.
இதற்கிடையில் தாமிராவுக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.