இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று(ஜன.13) உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படம் குறித்து தங்களது கருத்துகளையும், வாழ்த்துகளையும் சமூக வலைதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்வரன் படத்தின் இயக்குநர் சுசீந்திரன், விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்குத் தனது வாழ்த்தை கூறியுள்ளார்.
மாஸ்டர் பட குழுவுக்கு ஈஸ்வரன் இயக்குநர் வாழ்த்து - latest vijay movies
சென்னை: மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு ஈஸ்வரன் பட இயக்குநர் சுசீந்திரன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாஸ்டர்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “விஜய்யின் நடிப்பு அருமையாக உள்ளது. இதுபோன்ற படத்தை விஜய்க்கு உருவாக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. அனைவருக்கும் இது மாஸ்டர் பொங்கல்தான்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மாஸ்டர் படத்திற்கு 100% ரசிகர்களுக்கு அனுமதி... காசி திரையரங்கம் மீது வழக்குப்பதிவு