தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கைது - மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கைது

மலையாள நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் பேரில் பிரபல இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டு பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

sreekumar-menon
sreekumar-menon

By

Published : Dec 6, 2019, 4:20 PM IST

மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது நடிகை மஞ்சு வாரியர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். முன்விரோதம் காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகார் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை திருச்சூர் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து மூன்று மணி நேரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஸ்ரீகுமார் மேனன் பேட்டி

இதையும் படிங்க...

ஜெயலலிதாவுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கங்கனா

ABOUT THE AUTHOR

...view details