தமிழில் 'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், தற்போது விஜய்சேதுபதியை வைத்து 'லாபம்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
படத்திற்கான எடிட்டிங் பணியில் இருந்தவர், நேற்று (மார்ச் 12) மதியம் உணவு அருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் அலுவலகம் திரும்பாததால், உதவி இயக்குநர் ஒருவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.