தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாநாடு படத்தைப் பாராட்டிய பிரமாண்ட இயக்குநர் - maanaadu movie review

மாநாடு படத்தை மிகவும் புத்திசாலித்தனமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

மாநாடு
மாநாடு

By

Published : Dec 7, 2021, 7:48 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. டைம் லூப்பை அடிப்படையாக வைத்து வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் பாராட்டிவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் மாநாடு படத்தைப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாநாடு படத்தை மிகவும் புத்திசாலித்தனமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

ஷங்கர் வெளியிட்ட பதிவு

சிம்பு, எஸ்.ஜே. சூர்யா மிகவும் அற்புதமாக நடித்துள்ளனர். அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுக்குக் கொடுத்த வேலைகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர். சிறந்த பொழுதுபோக்குப் படமாக மாநாடு வெளியாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'தலைவரே... தலைவரே...'; எஸ்.ஜே. சூர்யா ஸ்டைலில் போனி செய்த சொமோட்டோ!

ABOUT THE AUTHOR

...view details