இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கினார். இதில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆத்மார்த்தம்...அற்புதம்...குறிப்பிடத்தக்க வித்தியாசம்: ஷங்கர் ரசித்த படங்கள் - சூரரைப் போற்று திரைப்படம்
இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் தான் பார்த்த மூன்று படங்களும் அதில் தனக்கு பிடித்த விஷயங்களையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Director Shankar
இதனையடுத்து ஷங்கர் சமீபத்தில், தான் ரசித்த திரைப்படங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சமீபத்தில் ரசித்தவை, 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை ஆத்மார்த்தமானது. 'அந்தகாரம்' படத்தில் எட்வின் சகாயின் ஒளிப்பதிவு அற்புதம். மலையாளத் திரைப்படமான 'ஜல்லிக்கட்டு' படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை குறிப்பிடத்தக்க வித்தியாசமானது" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ஜிவி பிரகாஷூம் நன்றி தெரிவித்துள்ளார்.