தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மகளை வாழ்த்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த ஷங்கர் - shankar marriage latest photos

இயக்குநர் ஷங்கர் தனது மகளின் திருமணத்திற்கு நேரில் வருகை தந்து வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் குடும்பம்
ஷங்கர் குடும்பம்

By

Published : Jun 28, 2021, 12:56 PM IST

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், கிரிக்கெட் வீரர் ரோகித்துக்கும் நேற்று (ஜூன்.27) திருமணம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் 50 பேர் மட்டுமே கலந்து கொண்ட இத்திருமணத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஷங்கர் வீட்டின் திருமணம்

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஷங்கர் வெளியிட்ட பதிவு

அதில், "எனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்திய நிகழ்வை என்னால் மறக்க முடியாது. மிக்க நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கமலுடன் ஜோடி சேரும் நதியா?

ABOUT THE AUTHOR

...view details