கடந்த 1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' தமிழ்ப் பத்திரிகையில் நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜுகிபா' என்ற கதை வெளியானது. இந்தக் கதையை இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படமாக எடுத்ததாக ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் சங்கருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் சங்கர் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ’எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.