தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர், ஷங்கர். இவர் எடுக்கும் படங்கள் தொழில் நுட்ப அளவிலும் பொருளாதார அளவிலும் பிரமாண்டத்தின் உச்சமாக இருப்பதால், இவர் இந்திய சினிமாவில் பிரமாண்ட பட இயக்குநராக இருந்து வருகிறார்.
தற்போது கமலின் 'இந்தியன் 2' படவிவகாரம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையே பிரச்சினை நிலவியுள்ளது. மேலும் இவர் ராம் சரணை வைத்து தெலுங்கில் ஒருபடமும் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் 'அந்நியன்' ரீமேக்கையும் எடுக்கவுள்ளார்.