'2.0' திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இயக்குநர் ஷங்கர் தற்போது 'இந்தியன்- 2' திரைப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். கரோனா தொற்று காரணமாக அமலில் இருக்கும் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த இளம் இயக்குநர்கள் குறித்து இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், 'அருவி' இயக்குநர் அருண் பிரபு, ஹெச். வினோத் போன்றோரை தனக்கு பிடிக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.