நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெளியாகி சக்க போடு போட்டு வரும் திரைப்படம், மாநாடு. 50 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இப்படம் சோனி லிவ் தளத்தில் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கும்‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இப்படம் முடிந்தவுடன் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அன்பிற்கினியாள் படங்களை இயக்கிய கோகுல் இதை இயக்குகிறார்.