தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முதலமைச்சரான ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் ஷங்கர்! - இயக்குநர் ஷங்கரின் படங்கள்

சென்னை: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Shankar
Shankar

By

Published : May 7, 2021, 9:09 PM IST

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று (மே 7) பொறுப்பேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவத்துள்ளனர். மேலும் பல திரைப்பிரபலங்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அரசாங்க உத்தரவுகளை குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசின் காப்பீடும், பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்கிற அறிவிப்பையும் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details