இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். இது ராம் சரணின் 15ஆவது படமாகும். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
தற்காலிகமாக 'RC15' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தைத் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்குத் தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ராம் சரணின் 15ஆவது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், அஞ்சலி, சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனே, சதாரா, பால்டன் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று (நவம்பர் 3) முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோலகலமாகத் தொடங்கியது ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்பு