தமிழ் சினிமா ரசிகர்களின் இதுவரை நிறைவேறாத ஆசையென்றால் அது செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான். அதையடுத்து 'புதுப்பேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களின் நிறைவேறாத ஆசையாகவே இருந்துவருகிறது.
அந்த வகையில் செல்வராகவன் நடிகர் தனுஷுடன் புதிய படத்தில் இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு புறம் அந்தப் படம் 2006ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.