இயக்குநர் சங்க தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ்நாடு இயக்குநர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை வடபழனியில் இயக்குநர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணியும், சி.வி. வித்யாசாகரும் போட்டியிடுகின்றனர். அதேபோல் பொருளாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், ரவி மரியா ஆகியோர் போட்டியிட்டனர்.
இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே. செல்வமணி! - tamilnadu director association
சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, 1366 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
r.k.selvamani
இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்றது. இதில், தமிழ் திரைப்பட இயக்குநர்கள், வரிசையாக நின்று வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், அதன் பிறகு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. மொத்தம் 1503 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில், 1366 வாக்குகள் பெற்று ஆர்.கே.செல்வமணி, தலைவராக வெற்றிப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சி.வி. வித்யாசாகர் 100 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.