செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றியதால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
எஸ்.ஜே. சூர்யாவின் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - நெஞ்சம் மறப்பதில்லை
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்த இத்திரைப்படம் பல்வேறு நிதி பிரச்னைகளாலும் கரோனா தொற்றுப் பிரச்னையாலும் படத்தின் வெளியாவது தாமதமாகிக்கொண்டே போனது. இறுதியாக மார்ச் 5ஆம் தேதி வெளியானது. படம் வெளியானபோது எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் யுவனின் இசையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கலவையான விமர்சனங்களை பெற்ற 'நெஞ்சம் மறப்பதில்லை' ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டமாக மே 14ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான 'காவல் துறை உங்கள் நண்பன்' திரைப்படமும் மே 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.