தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபுதேவாவின் 'பொய்க்கால் குதிரை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - பொய்க்கால் குதிரை

பிரபுதேவா நடிப்பில் - இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில், உருவாகிய புதிய படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' எனப் பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது.

prabudeva
prabudeva

By

Published : Aug 4, 2021, 7:40 PM IST

'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து', 'கஜினிகாந்த்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர், சந்தோஷ் பி. ஜெயக்குமார்.

இவர் தற்போது பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இது பிரபு தேவாவின் 54ஆவது படமாகும்.

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இமான் இசை அமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு 'பொய்க்கால் குதிரை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவா ஒற்றைக்காலுடன் நடிக்கிறார். இளைஞர்களை கவரும் விதமாக படம் எடுத்துவந்த சந்தோஷ் பி. ஜெயக்குமார், தற்போது பிரபுதேவாவை வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக 'பொய்க்கால் குதிரை' படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 22 ஆண்டுகளுக்குப்பிறகு கமலுடன் இணையும் பிரபுதேவா?

ABOUT THE AUTHOR

...view details