இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் தனுஷ் 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ முக்கியத் தோற்றத்தில் நடிக்கிறார்.
'ஜகம்' சுகமடைந்தும் 'ஜகமே தந்திரம்' வெளியாகும் கார்த்திக் சுப்பராஜ் - ஜகமே தந்திரம் வெளியாகும் தேதி
ஜகம் சுகமடைந்ததும் 'ஜகமே தந்திரம்' திரையில் வெளியாகும் என இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னையில் நடத்தப்பட்டது. ஜனவரி மாதமே அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைப்பெற்றன. மே 1 ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக அனைத்து படங்களின் வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மே 1 ஆம் தேதியான நேற்று 'ஜகமே தந்திரம்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை தனுஷின் ரசிகர்கள் வரவேற்றனர். இந்நிலையில் படம் வெளியாவது தொடர்பாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜகம் சுகமடைந்ததும் ஜகமே தந்திரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.