'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா' ஆகிய படங்களை இயக்கிய சாய் ரமணி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், 'தமிழ்நாட்டில் ஏழை எளிய மக்களை பாதுகாக்க குதிரை ரேஸ், சீட்டாட்ட கிளப்புகள், லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய நவீன யுகத்தில மீண்டும் இதுபோன்ற சூதாட்டங்கள் தலைதூக்கி உள்ளன. ரம்மி, எம் பி எல் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள்தான் அவை. படிக்கிற பிள்ளைகள் இவற்றை விளையாடி, அதில் வரும் பணத்தில் தனது செலவை தானே பார்த்துக் கொள்கிறேன், இதைவைத்து சுற்றுலா செல்ல உள்ளேன் என்று வீடியோ பதிவு போடுகிறார்கள். அதை வைத்து தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் கொடுக்கின்றனர்.
இதனால் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் தொலைபேசியை கையில் எடுத்தாலே அதிக அளவில் வரும் விளம்பரங்களில் இதுதான் முதன்மை இடத்தில் உள்ளது. ரம்மி ஆடுங்கள் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதை விளையாட தெரியாதவர்கள் கூட அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக இந்த விளையாட்டை விளையாட தொடங்குகிறார்கள். எப்படி லாட்டரி மூலம் மக்கள் சுரண்ட பட்டார்களோ அதேபோன்ற ஆபத்து இந்த விளையாட்டிலும் உள்ளது. இந்த விளையாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று தெரியவில்லை. அரசு அலுவலர்கள் இதுபோன்ற விளையாட்டுகளை ஆராய்ந்து தடை செய்ய வேண்டும்' என்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கோரிக்கை விடுத்த இயக்குநர் இதையும் படிங்க... போஸ்ட் புரொடக்ஷன் புகைப்படத்தை பகிர்ந்த லோக்கேஷ் கனகராஜ்: அப்டேட் கேட்டு அழும் ரசிகர்கள்