தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஜய்யின் போக்கிரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'ஆடை' இயக்குநர்! - Director Ratnakumar dance for Pokkri song

சென்னை: என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் தளபதிக்கு நன்றி என்று குறிப்பிட்டு விஜய்யின் போக்கிரி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

Director Ratnakumar shares throwback video of him dancing for Pokkri song
Director Ratnakumar

By

Published : Mar 17, 2020, 4:18 PM IST

தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான 'போக்கிரி பொங்கல்' பாடலுக்கு கிரிக்கெட் மைதானத்தில் வைத்து குத்தாட்டம் போட்ட வீடியோவை ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கோலிவுட் பிரபலங்களில் பலரும் தளபதி விஜய்யின் ரசிகர்களாக இருப்பதுடன், அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்வதைத் தவறாமல் கடைபிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய்யின் தீவிர ரசிகரான மேயாத மான், ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார், போக்கிரி படத்தில் இடம்பெறும் போக்கிரி பொங்கல் பாடலுக்கு, கிரிக்கெட் மேட்சுக்கு இடையே நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டரில், 2010ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்க் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியின் போது, போக்கிரி பொங்கல் பாடலுக்கு செம நடனம் ஆடியுள்ளேன்.

தற்போது 2020ஆம் ஆண்டு நடைபெறுகிறது. என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும் தளபதி விஜய்க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். தளபதி விஜய் நடித்திருக்கும் புதிய படமான மாஸ்டர் படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு திரைக்கதை அமைப்பதில் உதவி புரிந்தார் ரத்னகுமார்.

இதனை இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் வெளிப்படுத்தினார். இதைக்கேட்டு சந்தோஷத்தின் உச்சத்துக்குச் சென்ற ரத்னகுமார், தான் தளபதியின் தீவிரமான ரசிகன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக தனது பழைய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விபத்து நடந்ததை நடித்துக் காட்டச்சொல்லி காவல் துறை வற்புறுத்தல்: உயர் நீதிமன்றத்தில் கமல் முறையீடு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details