உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரசைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இதற்கிடையில் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்தார்.
மேலும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் கைதட்டினர். ஒரு சில இடங்களில் மக்கள் ஒன்றுகூடி இதை ஒரு விழா போல கொண்டாடினர். அதுதொடர்பான காணொலிகள் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.