இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மே 19ஆம் தேதி நிறைவடைந்ததது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடந்த ஆந்திர மாநிலத்தில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது.
ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார். இதனை அம்மாநில மக்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனைத்தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார். இதில், 'பெயர் தெலுங்கு தேசம் கட்சி, பிறப்பு 29ஆம் தேதி மார்ச் 1982, இறப்பு மே 23 2019.