தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மம்முட்டியின் தமிழ்ப் பேச்சுக்கு உதவிய இயக்குநர் ராம் - இயக்குநர் ராம்

தமிழ் நடிகர்களுக்கே சவால்விடும் விதமாக மலையாள மெகா ஸ்டார் நடிகரான மம்முட்டியின் தமிழ் உச்சரிப்பை அவரது தமிழ்ப் படங்களான அழகன் முதல் கடைசியாக வெளியான பேரன்பு வரை பார்த்து மெய்சிலிர்த்துள்ளோம். இப்போது அடுத்தகட்டமாக பழமைத் தமிழில் பேசும் முயற்சியில் இயக்குநர் ராமின் உதவியுடன் களம் இறங்கியுள்ளார்.

மலையாள நடிகர் மம்முட்டி

By

Published : Oct 12, 2019, 2:05 PM IST

Updated : Oct 12, 2019, 4:08 PM IST

சென்னை: 'மாமாங்கம்' விழாவை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு நடிகர் மம்முட்டி தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசவுள்ளார்.

கேரளாவிலுள்ள மலபார் பகுதியில் கொண்டாடப்படும் 'மாமாங்கம்' என்ற திருவிழாவை அடிப்படையாகக் கொண்டு மாமாங்கம் என்ற திரைப்பட விழா உருவாகியுள்ளது.

வரலாற்றுப் படமான இதில் மம்முட்டி மாவீரன் சாவிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிராச்சி தெஹ்லான், உன்னி முகுந்தன், மோகன் ஷர்மா, அனுசித்தாரா, பிராச்சி தேசாய், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

18ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் அமைந்துள்ள படம் வரும் நவம்பர் 21ஆம் தேதி மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இதையடுத்து இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இதன் தமிழ்ப் பதிப்புக்கு நடிகர் மம்முட்டியே சொந்தமாக குரல் கொடுக்கிறார்.

இந்த நிலையில், தனது முந்தைய தமிழ்ப் படங்களுக்கு சொந்தக் குரல் கொடுத்து தமிழ் நடிகர்களுக்கே தன் தமிழ்ப் புலமையால் சவால்விடுத்த மம்முட்டி மாமாங்கம் படத்துக்காக பழமைத் தமிழில் பேசுகிறார்.

இதிலும் தனது திறமையை வெளிகாட்ட எண்ணிய அவர், தற்போது இயக்குநர் ராம் ஆலோசனை, உதவியுடன் பழமைத் தமிழில் டப்பிங் பேசுகிறார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த 'பேரன்பு' ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.

Last Updated : Oct 12, 2019, 4:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details