'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது, 'மாநாடு' படத்தைப் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இதனையடுத்து அவர் 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்' உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய, ராம் இயக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.
ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி: படப்பிடிப்பு தொடக்கம் - ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி
இயக்குநர் ராம், நிவின் பாலி நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் தொடங்கியுள்ளது.
Nivin Pauly
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷ் கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவின் பாலி பட ஷுட்டிங் ஸ்பாட்டில் திருட்டு - என்ன திருடப்பட்டது தெரியுமா?