இயக்குநர் ராம் படத்தில் நிவின்பாலி! - நடிகர் நிவின்பாலியின் படங்கள்
சென்னை: இயக்குநர் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ram
தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம். இவர் கடைசியாக நடிகர் மம்மூட்டியை வைத்து 'பேரன்பு' படத்தை இயக்கினார். தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியான இந்தப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தபடத்தை தொடர்ந்து தற்போது நடிகர் நிவின் பாலியை வைத்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் புதிய படத்தை ராம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.