தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரீகல் டாக்கீஸில் வெளியாகும் 'மிருணா' - மிருணா திரைப்படம்

சென்னை: தயாரிப்பாளர் சிவி குமார் புதிதாக தொடங்கியுள்ள "ரீகல் டாக்கீஸ்" என்ற ஓடிடி இணையதளத்தில் எழுத்தாளர் ராகவ் மிர்தாத் இயக்கிய "மிருணா" திரைப்படம் வெளியாக உள்ளது.

ரீகல் டாக்கீஸ்
ரீகல் டாக்கீஸ்

By

Published : Jul 5, 2020, 3:29 PM IST

தேசிய விருது பெற்ற 'பாரம்' படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் 'மிருணா'. இந்தப் படத்தில் எம். அருண் குமார், சரண்யா துராடி, வெற்றி, ஆதிரா, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் தயாரிப்பாளர் சிவி குமார் புதிதாக தொடங்கியுள்ள ஓடிடி இணையதளமான ரீகல் டாக்கீஸில் ஜூலை 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது.

'மிருணா' குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில், "ஒரு நேர்த்தியான காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. ஜாக்கிங் செல்லும் அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா. அவள் மேல் எழும் இனம்புரியாத வாசனை, ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று அவள் தந்த பார்வை அவனை தடுமாற வைக்கிறது. அதன் பிறகு திடீரென்று அவ்வப்போது அவன் வாழ்வில் எட்டிப் பார்க்கும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறான். நண்பர் ஒருவர் ஜூவாவை பைத்தியம் என்று நினைக்கிறான். ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் அங்கே அவனது தேடலுக்கு பதில் கிடைக்கிறதா? என்பது திரைக்கதை.

மிருணா என்பது உண்மையிலேயே ஒரு மனிதப் பெண் தானா இல்லை தேவதையா, இல்லை ஜீவாவின் கற்பனையா ? என்பதை விளக்கும் படமாக இந்தப் படம் உருவாகி உள்ளது" என்று தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details