தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கிறுக்கல்கள்' கவிதைத் தொகுப்பு: அறிமுகம் செய்த பார்த்திபன் - கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட இயக்குநர் பார்த்திபன்

கோவை: நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்' கவிதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பார்த்திபன் புத்தகத்தை அறிமுகம்செய்து வாசகர்களிடம் உரையாற்றினார்.

director R Parthiban releases his kirukalgal book in Coimbatore  bookshop
director R Parthiban releases his kirukalgal book in Coimbatore bookshop

By

Published : Feb 27, 2020, 10:55 PM IST

திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தான் எழுதிய 'கிறுக்கல்கள்' கவிதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்வானது கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் ஒடிசி புத்தகக் கடையில் நடைபெற்றது. இதில் தமிழ் வாசகர்கள், பொது மக்களிடமும் பார்த்திபன் உரையாற்றினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், "சினிமா என்பதே பெரிய போராட்டம். ஒவ்வொரு போராட்டத்தையும் கடந்துதான் ஒரு திரைப்படம் வெளிவருகிறது. தெய்வமகன் முதல் தேவர்மகன் வரை அனைத்துப் படங்களும் தேசிய விருதுக்குச் சென்ற நிலையில் நான் எடுத்த ஒத்த செருப்பு படத்திற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததால்தான் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து ஆஸ்கருக்கு அனுப்பினேன்.

தற்போது 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்துவருகிறேன். ஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை எடுக்கவுள்ளேன். அரசியலில் ரஜினி, கமல் ஆகிய இருவர்களும் சந்திக்கும் சிரமங்களை நான் அறிவேன். இதனால் முதலில் சினிமாவில் சாதித்த பின்பே அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது" என்றார்.

கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட இயக்குநர் பார்த்திபன்

இதையும் படிங்க: தசாப்தம் கடந்த சமந்தா: வாழ்த்து தெரிவித்த சின்மயி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details