விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையமாக வைத்து இயக்குநர் பொன்னி மோகன் இயக்கி வரும் படம் 'வாழ்க விவசாயி'. இப்படத்தில் நடிகர் அப்புக்குட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை வசுந்தரா நடித்துள்ளார்.
இப்படம் குறித்து பொன்னி மோகன் கூறுகையில், நான் ஒரு விவசாயின் மகன். விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். அது இந்தப் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இப்படத்தில் வசுந்தரா வழக்கமான கதாநாயகி கிடையாது. இந்தப் படத்தில் மேக்கப் இல்லாமல் முழுமையான அர்ப்பணிப்போடு நடித்துள்ளார். இந்தப் படம் அவருக்கும் நல்லபெயரைத் தேடித் தரும். கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள்.
‘வாழ்க விவசாயி’ படத்தின் ஒரு காட்சி இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப் பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதை விட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று அவர் கூறினார்.