சென்னை:மருத்துவம் வியாபாரமாக மாற்றப்படும் பொழுது, ஏழை எளிய மக்கள் உயிர்வாழ்வது கேள்விக்குறியாகிறது. மருத்துவம் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேராததால் அவர்களின் அவல நிலை என்ன என்பதையும், மருத்துவர்கள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் உயிரை காப்பாற்றுகின்றனர் என்ற மேன்மையான செயல்பாடுகள் பற்றியும் வெளிபடுத்தும் படம் காயம்.
சினிமாவை காப்பாற்றுவது சிறிய படங்கள்தான் - இயக்குநர் பேரரசு! மாறா மூவீஸ் சார்பில் மாறா N.ராஜேந்திரன் தயாரிக்க, கிடா விருந்து, உதய் ஆகிய படங்களை இயக்கிய A. தமிழ்செல்வன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ரிஷ்வான் கதாநாயகனாகவும், ஜோதா, அனீஷா இருவரும் கதாநாயகிகளாகவும் அறிமுகமாகியுள்ளனர். வில்லனாக பருத்திவீரன் சரவணனும், குணச்சித்திர வேடமாக மருத்துவர் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் N.ராஜேந்திரனும் அமர்க்களப்படுத்தியுள்ளனர்.
சேலம் தமிழ்,சேரன்ராஜ் ஆகியோருடன் தீபக், காஞ்சனா, ஆர். எம்., காஞ்சனா, அம்மு, அச்சு,ஈஸ்வரன், சேகர், செந்தில், ஆரியன் போன்ற வளரும் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - A.சம்பத்குமார், இசை-நல்ல தம்பி,
பாடல்கள் - செல்வராஜா, தங்கதுரை
சண்டை பயிற்சி - ஹரி முருகன்,
நடனம் - ஸ்டைல் பாலா
தயாரிப்பு - மாறா .N.ராஜேந்திரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- A. தமிழ் செல்வன்
சேலம், ஏற்காடு போன்ற இடங்களில் 30 நாட்களில் ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, கில்ட் தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசும்போது, சினிமா கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை காப்பாற்றுவது சிறிய படங்கள்தான். கரோனா ஊரடங்கால் 200-க்கும் மேற்பட்ட சிறிய படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளது. கரோனா ஊரடங்கால் இழப்பை சந்தித்துள்ளதால் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:எண்ணித்துணிக ஆடியோ உரிமையை வாங்கியது திங்க் மியூசிக்