வித்தியாசமான கதைக் களங்களோடு தனக்கே உரித்தான பாணியில் சினிமா எடுப்பதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட புதிய முயற்சியாக அமைந்தது.
இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.