புதிய பாதையில் பயணத்தை தொடங்கிய பார்த்திபன், புதிய முயற்சி செய்யத் தயங்கியதில்லை. அவரின் புதிய முயற்சியான ‘ஒத்த செருப்பு’ அமீர்கான், ரஜினிகாந்த் மட்டுமல்லாது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இது பார்த்திபனே தயாரித்து, இயக்கி நடித்த சோலோ ஆக்டிங் திரைப்படமாகும். இந்நிலையில் பார்த்திபன் மனம் வருந்தி ஒரு பதிவிட்டுள்ளார்.
ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7ஆம் அறிவை...! - #ஒத்தசெருப்பு
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ பாராட்டுகளை பெற்றுவரும் வேளையில் அவர் வருத்தத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.
oththa Seruppu
அதில் அவர், # OS7 இப்படிப்பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7ஆம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியாயன்னு! Theatre-ல் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரிசல் இலக்கிய பிதாமகன் கி.ரா பிறந்ததினம்