இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தனது 40ஆவது படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.
சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி, இளவரசு உள்ளிட்டோர் இதில் குணச்சித்திர கதாபாத்திங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியானது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது. இந்நிலையில் காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் (ஆகஸ்ட் 31) நிறைவடைந்துள்ளது.
இதனைப் படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு 51 நாள்களில் நிறைவடைந்துவிட்டது. வெளியில், மழை எங்களது வேகத்தைக் குறைந்துவிட முடியாது. என்ன ஒரு சுறுசுறுப்பான படக்குழு. நினைத்த பார்க்க முடியாத உழைப்பைப் படத்திற்குச் செலுத்தினார்கள். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்த செருப்பு ரீமேக் - அபிஷேக் பச்சனுக்கு பார்த்திபன் புகழாரம்