தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்! - director ranjith tweet regarding Fathima latif death

சென்னை ஐஐடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

Director Pa Ranjith tweet on Fathima latif death

By

Published : Nov 15, 2019, 5:53 PM IST

திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் அரசியல் பேசி வருபவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் எடுத்த அனைத்துப் படங்களிலும் அரசியல் ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கும்.

இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து பல அரசியல்வாதிகளும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வர, இயக்குநர் பா. ரஞ்சித்தும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, எவரும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் மாணாக்கர்களின் மன உறுதியை திட்டமிட்டே சிதைத்து கொண்டிருக்கிறார்கள். ரோகித் வெமுலாக்கள் வரிசையில் இன்று பாத்திமா_லத்தீஃபா.. இதை தடுத்து நிறுத்த வேண்டியது நம் எல்லோரின் கடமை!' என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: ஒப்பற்ற வில்லனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details