இந்தியாவின் தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சாசன சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைக் குறிக்கும் வகையிலேயே ஆண்டுதோறும் நவம்பர் 26ஆம் தேதி சட்ட தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
தேசிய அரசியல் சாசன தினம்: காணொலி வெளியிட்ட பா. இரஞ்சித் - இந்திய அரசியல் சாசன சட்டம்
தேசிய அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு இயக்குநர் பா. இரஞ்சித் தனது சமூக வலைதளப்பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
constitution
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படும் அம்பேத்கர் அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார்.
இதனைக் குறிக்கும் வகையில் இயக்குநர் பா. இரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன் சார்பாக காணொலி ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.