தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலைத் தழுவி வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி, சினிமா விமர்சகர்கள், திரைப்பட ரசிகர்கள் என அனைவரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
’நடிப்பு அசுரன் தனுஷ்’ - இயக்குநர் பா.ரஞ்சித் - மஞ்சு வாரியர்
'அசுரன்' படம் பற்றிய தனது கருத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித், தமிழ்த்திரையில் அசுரன் கதையை நிகழ்த்திக் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி எஸ். தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்க சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!! என்று ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இவரின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் வாசிங்க: அசுரன் பல நாவல்களைப் படமாக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது-காவல் துணை ஆணையர் பெருமிதம்!