த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டரில், "சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.
அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு. சூர்யா, த.செ.ஞானவேல் படக்குழுவினருக்கு நன்றிகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஜெய் பீம்' பார்த்தேன் கண்கள் குளமானது - கமல்ஹாசன்