தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கபிலனுக்கு வாழ்த்து கூறிய பா.ரஞ்சித் - பிறந்தநாள் வாழ்த்துகள் கபிலா

இயக்குநர் பா.ரஞ்சித் அவருடைய 'சார்பட்டா' நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

director pa.ranjith wishes actor arya on his birthday ceremony
director pa.ranjith wishes actor arya on his birthday ceremony

By

Published : Dec 11, 2020, 2:22 PM IST

சென்னை: வடசென்னை பகுதியில் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்னதாக இருந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம், 'சார்பட்டா பரம்பரை'.

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும், இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யா 'கபிலன்' என்ற கதாப்பாத்திரத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் ஆர்யா, கபிலனாக வாழ்ந்துள்ளார் என சமீபத்தில் குறிப்பிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் ஆர்யாவின் பிறந்தநாளான இன்று (டிச. 11) தனது ட்விட்டர் பக்கத்தில், 'பிறந்தநாள் வாழ்த்துகள் கபிலா' எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். மேலும் அந்தப் பதிவில், 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் பதிவிட்ட படம்

மேலும், பல்வேறு நடிகர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் நடிகர் ஆர்யாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details