தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சமூக அக்கறை மிகுந்த படம் எடுக்கவே விருப்பம் - இயக்குநர் பா. இரஞ்சித் - புதிய ஐந்து திரைப்படங்களை எடுக்கும் நீலம் புரொடக்சன்ஸ்

சமூக அக்கறை மிகுந்த படங்கள் எடுப்பதை நீலம் புரொடக்ஷன்ஸ் தனது கடமையாகக் கருதுவதாக இயக்குநர் பா. இராஞ்சித் கூறியுள்ளார்.

Pa.Ranjith
Pa.Ranjith

By

Published : Dec 17, 2019, 10:43 PM IST

திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கோல்டன் ரேசியோ, லிட்டில் ரெட்கார் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளது. இந்தத் திரைப்படங்களுக்கான இயக்குநர்கள் அறிமுக விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பா. இரஞ்சித், தயாரிப்பாளர் அதிதீ, இயக்குநர்கள் லெனின் பாரதி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பா. இரஞ்சித்

இதில் பா. இரஞ்சித் பேசுகையில், "சினிமாவில் இயக்குநராகப் படமெடுத்து வெற்றிபெற்று பிறகு தயாரிப்பிலும் இறங்குவது சாதாரணமானதல்ல. குறிப்பாக எனது அரசியலை புரிந்துகொண்டு என்னோடு சேர்ந்து இயங்க தயாரிப்பாளர்கள் சிலர் முன் வந்துள்ளனர், இதை முக்கியமான நிகழ்வாக நான் கருதுகிறேன்.

கலை நுட்பமான படங்களைத் தாண்டி வெகுஜன மக்களை சென்று சேரும் படங்களையே நான் தயாரிக்க விரும்புகிறேன். சமூக அக்கறை மிகுந்த படங்கள் எடுப்பதை நீலம் புரொடக்ஷன்ஸ் தனது கடமையாகக் கருதுகிறது. அந்த வகையில் தற்போது ஐந்து இயக்குநர்களின் கதைகளைத் தயாரிக்க உள்ளோம்.

மும்பை போன்ற சினிமா சந்தைமிக்க இடங்கள் கார்ப்பரேட்மயமாகிவிட்டதால் ஒற்றைத் தயாரிப்பாளர் இல்லாதநிலை உருவாகிவிட்டது. தனியாக ஒருவர் படமெடுப்பதில் பிரச்னைகள் உண்டு. ஒரு படத்தின் தயாரிப்பில் பலரின் தலையீடு இருக்கும்போது அந்தப் படத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இந்தப் பணியைச் செய்வதற்கு நீலம் புரொடக்ஷன்ஸ் முன்வந்துள்ளது" என்றார்.

இவரைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், "இயக்குநர் பா. இரஞ்சித் இன்னும் பல இயக்குநர்களை உருவாக்க வேண்டும். நீலம் புரொடக்ஷன்ஸ் கேட்கும்போதெல்லாம் அவர்களுக்காக படம் இயக்கத் தயாராக உள்ளேன். பரியேறும் பெருமாளுக்குப் பிறகு நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் இயக்க ரஞ்சித் அழைப்புவிடுத்தார்.

ஆனால் எனக்கு தனுஷை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அறிந்த ரஞ்சித் முதலில் தனுஷ் படத்தை இயக்குமாறு கூறினார். எனது மூன்றாவது படம் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக இருக்கும். தயாரிப்பாளர் அதிதீ கோவாவில் என்னை சந்தித்தபோது 'பரியேறும் பெருமாள்' படம் குறித்து உயர்வாகப் பேசியிருந்தார். தொடர்ந்து நேர்மையான படைப்புகளைத் தருவதாலேயே ஊடகங்களின் பாராட்டை நீலம் பெற்றுள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details