தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி’ - இயக்குநர் தகவல் - வருத்தப்படாத வாலிபர் சங்கம்

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம்

By

Published : Oct 7, 2021, 8:51 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

இயக்குநர் தகவல்

இப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் வருவது உறுதி.

சிவகார்த்திகேயன் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்துவரும் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம், போட்றா வெடிய" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டாக்டருடன் இணைந்த மாநாடு.. கைகோர்க்கும் சிம்பு-சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details