'மூடர் கூடம்' பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'அக்னி சிறகுகள்'. அருண் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை டி. சிவா தயாரித்துள்ளார்.
இந்நிலையில் 'அக்னி சிறகுகள்' படத்தில் இயக்குநர் நவீன் தனது மகளை நடிக்க வைத்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "என் மகள் சீவீனுக்கு, ஒரு இயக்குநராக எப்படி அழுது நடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தபோது ஒரு தேர்ந்த நடிகைபோல் அவள் என்னை உள்வாங்கும் அந்த அழகை இன்று ரசிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க:அதர்வாவின் 'அட்ரஸ்' பட டீசர்: சூப்பர் ஸ்டார் பாராட்டு