காமராசு, அய்யா வழி, நதிகள் நனைவதில்லை உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திர பேச்சாளராகவும் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் இவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் 138ஆவது வார்டில் போட்டியிடுகிறார். இதற்கான விருப்ப மனுவை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவியிடம் அவர் வழங்கினார்.
இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான காணொலி அப்போது திருநகர். ஜி. மோகன், பகுதி செயலாளர் காமராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மாநகராட்சி தேர்தலில் திரைப்பட இயக்குநர் ஒருவர் போட்டியிடுவதாக பரவிய தகவல் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:Jai Bhim - சர்வதேச அளவில் கிடைத்த அங்கீகாரம்