தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'நான் அவர மிஸ் பண்றேன்' - விஷால் குறித்து மிஷ்கின் - Director mysskin on love for vishal

நடிகர் விஷால் மீது தனக்கிருக்கும் அன்பு குறித்தும், அவரை மிஸ் செய்வதாகவும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

Director mysskin says he misses Vishal
Director mysskin says he misses Vishal

By

Published : Jun 5, 2020, 3:10 PM IST

முதல் முதலாக ‘துப்பறிவாளன்’ திரைப்படத்துக்காக இயக்குநர் மிஷ்கினும் நடிகர் விஷாலும் ஒன்றாக பணியாற்றினர். அந்தத் திரைப்படம் ஹிட் அடித்து இரண்டாம் பாகம் எடுக்கும் வேலைகளும் தொடர்ந்தன. ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து 'துப்பறிவாளன்' இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் வெளியேறினார். இதன்பின்னர் படத்தை தான் இயக்குவதாக விஷால் அறிவித்தார்.

அண்மையில் ஒரு நேர்காணலில், விஷாலை மேடையில் ஏன் திட்டினார் என்பது குறித்து மிஷ்கினிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

அப்போது இருவருக்கும் இடையில் பிரச்னை இருந்ததாகவும், அப்போது விஷால் கோபமடைந்ததைத் தொடர்ந்து மிஷ்கினும் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறும்போது கோபப் பட்டதாக தெரிவித்தார்.

மேலும் விஷால் தன்னிடம் மன்னிப்பு கேட்பதை தான் விரும்பவில்லை என்றும், விஷாலை தன்னுடைய இளைய சகோதரராக கருதுவதாகக் கூறி அவர் மீது வைத்திருக்கும் அன்பு தூய்மையானது என மிஷ்கின் தெரிவித்தார்.

தற்போது விஷாலை மிஸ் பண்ணுவதாக மிஸ்கின் குறிப்பிட்டார். அவ்வப்போது தனது அலுவலகத்துக்கு வாரம் இரண்டு முறை வந்து சந்தித்துவிட்டு, முத்தம் கொடுத்து, கத்திவிட்டு, காதை பிடித்து திருகி விட்டுதான் விஷால் செல்வார் என்றும், அவற்றையெல்லாம் தான் மிஸ் செய்வதாக மிஷ்கின் குறிப்பிட்டார்.

Director mysskin says he misses Vishal

இருவருக்குமிடையிலான சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், இருவருமே இறங்கிவரமாட்டோம் என்றும் மிஷ்கின் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details