தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிசாசு 2' திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின்! - இயக்குநர் மிஷ்கின் புதிய திரைப்படங்கள்

பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் 'பிசாசு 2' பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிசாசு 2
பிசாசு 2

By

Published : Sep 20, 2020, 3:25 PM IST

'சித்திரம் பேசுதடி' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் மிஷ்கின். இதனைத்தொடர்ந்து 'அஞ்சாதே' , 'யுத்தம் செய்', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சைக்கோ' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இவர் ‘துப்பறிவாளன் 2’ படத்தை, நடிகர் விஷாலை வைத்து இயக்கப்போவதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மிஷ்கின் தற்போது தனது இயக்கத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக நேற்று(செப்.19) இரவு 12 மணிக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைக்கிறார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details