இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில், 2017ஆம் ஆண்டு வெளியான படம் 'துப்பறிவாளன்'. ஆக்ஷ்ன் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் லண்டனிலில் நடைபெற்றது. அதில் விஷால், பிரசன்னாவுடன் இணைந்து கவுதமி, ரகுமான் ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கிடையில் மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் வெற்றி பெற்றதால் அவர் தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.