தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தமிழ்சினிமாவின் மிக அறிவார்ந்த படம் இது..! - 'குதிரைவால்' குறித்து மிஷ்கின் - குதிரை வால்

’குதிரை வால்’ படத்தின் சிறப்புக்காட்சியில் அப்படத்தை கண்ட மிஷ்கின், அப்படத்தை தமிழ் சினிமாவின் மிக அறிவார்ந்த படம் இது தான் எனப் பாராட்டியுள்ளார்.

தமிழ்சினிமாவின் மிக அறிவார்ந்த படம் இது..! - ’குதிரைவால்’ குறித்து மிஷ்கின்
தமிழ்சினிமாவின் மிக அறிவார்ந்த படம் இது..! - ’குதிரைவால்’ குறித்து மிஷ்கின்

By

Published : Mar 17, 2022, 7:36 PM IST

மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள படம், குதிரைவால்.

இப்படம் திரையரங்குகளில் நாளை(மார்ச் 18) வெளியாகிறது. இந்நிலையில், நேற்று திரை பிரபலங்களுக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதில் இப்படத்தைப் பார்த்த இயக்குநர் மிஷ்கின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

என்னிடம் பீர் பாட்டிலால் அடி வாங்கிய கலையரசன்..!

அதில் பேசிய அவர், ”இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே மிகச்சிறந்த படம் இதுதான். தான் நினைத்ததை 100 விழுக்காடு இப்படத்தின் இயக்குநர்கள் செய்துள்ளனர். நான் பார்த்ததிலேயே தமிழ் சினிமாவின் மிகவும் அறிவார்ந்த படம் இதுதான் என்று சொல்லுவேன். மிகக் கடினமான பல கற்பனைக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பார்க்க சுலபமாகத் தெரியலாம். ஆனால், மிகவும் கடினமான படம். ஒவ்வொரு ஃபிரேமும் முன்தயாரிப்பாக உள்ளது. ஆங்கிலப் படத்திற்கு நிகரான படம் இது. இப்படத்தை பொறுமையாக பார்க்க வேண்டும். இப்படத்தின் நாயகனான கலையரசனை நான் தான் ‘நந்தலாலா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினேன். மோதிரக் கைகளால் குத்து வாங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால், இவன் என்னால் படக் காட்சியில் பீர் பாட்டிலில் அடி வாங்கினான்” எனப் பாராட்டினார்.

இதையும் படிங்க:'பயணி... லவ் யூ' - மகள் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து; ஏன் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details