முத்தையா 'குட்டிப்புலி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிராமத்து கதைகளையும் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாழ்வியல் முறையும் மையமாக வைத்து படங்களை இயக்கிவருகிறார். இவர் இயக்கிய 'கொம்பன்', 'கொடிவீரன்', 'மருது', 'தேவராட்டம்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
முத்தையா இயக்கத்தில் மீண்டும் விஷால்! - முத்தையா படங்கள்
சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விஷால் மீண்டும் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
Muthaiah
இவரது 'புலிக்குத்தி பாண்டி' படம் பொங்கலன்று தனியார் டிவியில் நேரடியாக வெளியாகி டிஆர்பியில் சாதனைப் படைத்தது. இவர் விஷால், ஶ்ரீதிவ்யா, சூரியை வைத்து இயக்கிய 'மருது' படம் வெற்றிபெற்றது.
இந்நிலையில் முத்தையா - விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.