இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'திரெளபதி' திரைப்படம் கடந்த மாதம் இறுதியில் வெளியானது. இது நாடக காதலுக்கு எதிரான படம் என்று ஒரு பிரிவினர் கொண்டாட, மற்றொரு பக்கம் இது சாதி வெறியைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படத்தின் வசூல் ஐந்து கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
'எனது அடுத்த பட பெயரும் இப்படித்தான்'- 'திரெளபதி' பட இயக்குநர் மோகன் ஜி அதிரடி - இயக்குநர் மோகன் ஜி
'திரெளபதி' பட இயக்குநர் மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'எனது அடுத்த பட பெயரும் இப்படி தான்'- 'திரெளபதி' பட இயக்குநர் மோகன் அதிரடி!
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், 'திரெளபதி'ன்னு கடவுள் பெயர் வைத்ததால்தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவாகப் புரியுது. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர்தான். விரைவில் அறிவிப்பு வரும். காத்திருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'என் பேச்சை அவர் ரசித்துக் கேட்பார்' - திருமணம் வாழ்க்கை குறித்து குஷ்பு நெகிழ்ச்சி