தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இவனுங்க என்ன டிசைன்னுனே புரியல'- ஆதங்கப்பட்ட மித்ரன்

கரோனா தொற்றை குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தொலைக்காட்சி சேனல் ஒன்று பரப்புரை செய்வதாக இயக்குநர் பி.எஸ் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மித்ரன்
மித்ரன்

By

Published : Apr 4, 2020, 8:12 PM IST

டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பலர் பங்கேற்று சொந்த ஊர் திரும்பினர். அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் பல வெளிநாட்டினரும் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பங்கேற்றவர்களின் விவரங்களை கண்டறிய அந்தந்த மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டிலும், அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் தாமாக முன்வந்து கரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனை செய்துகொள்ளும் படி முதலமைச்சர் பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "COVID-19 நேரத்தில் Sanitizer ஐை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களைப் பார்ப்பதெல்லாம் கோவப்பட்டோம்!. இன்று காலை ஒரு news channel இதே COVID 19 ஐை ஒரு மதத்திற்கு எதிரான பிரசாரமாக மாத்திகிட்டு இருக்கான். இவனுங்க எல்லாம் என்ன டிசைன் என்று புரியல" என ட்வீட்டில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details