மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில், ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். ஏப்ரல் 9ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
'கர்ணன்' படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட மாரி செல்வராஜ் - கர்ணன் பாடல்கள்
தனுஷின் 'கர்ணன்' படப்பிடிப்பின்போது எடுத்தப் புகைப்படங்களை இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டப் பலரும் படத்தை வெகுவாகப் பாராட்டினர். சமீபத்தில் இந்தப் படத்தின் 'கண்டா வரச்சொல்லுங்க', 'மஞ்சனத்திப் புராணம்', 'தட்டான் தட்டான்' உள்ளிட்ட பாடல்களின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், 'கர்ணன்' திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் நாளை (மே 14) வெளியாகிறது. இதனையடுத்து 'கர்ணன்' பட இயக்குநர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.