தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெயர் மாற்றத்தால் தேவதைகளின் மாட வெளிச்சம் குறையாது - மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அப்பாடலின் வரிகளை மாற்றியமைத்துவிட்டதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Director Mari Selvaraj changed the pandarathi song lyrics of upcoming Karnan movie
Director Mari Selvaraj changed the pandarathi song lyrics of upcoming Karnan movie

By

Published : Mar 25, 2021, 4:01 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்குப் பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும்தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக்கொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சிப் படிமங்களைப் பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் ரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாகச் சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.

ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்துவைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறோம்.

பெயர்மாற்றப்பட்ட கர்ணன் படப்படால்

தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தைப் பாடுவான் கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்... காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுகுறிப்பாக படத்தில் மாற்றம் செய்யப்பட்டதைப் போலவே இணையத்திலும் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. யூ-ட்யூப் விதியின்படி ஓரிரு நாள்களில் பாடலின் பெயர் தானாக மாறிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details